undefined

  பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க...  அன்னதானம் வழங்குபவர்களுக்கு  புதிய கட்டுப்பாடு...!

 


 
முருகனின் அறுபடை வீடுகளில் 3 வது திருக்கோவில் பழனி முருகன் கோயில். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த கோவிலின் மூலவர்  நவபாஷாணத்தால் ஆனவர். போகர் இந்தத் தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு  பழநி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் மூலவர் தண்டாயுதபாணிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட உள்ளது.

 முருக பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகப் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளைச் சுமந்து தங்கள் நேர்த்திக்கடனை முருகப்பெருமானுக்கு செலுத்துவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது என திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பாத யாத்திரைக்குச் செல்வோருக்கு அன்னதானம் வழங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே  உணவு பாதுகாப்புத் துறையிடம் தக்க அனுமதியைப் பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முறையான அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குபவர்களுக்கு  ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!