PF முன் பணம் மற்றும் திரும்பப் பெறுதலுக்கான புதிய விதிகள் வெளியீடு!
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் மற்றும் ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான புதிய காலக்கெடு மற்றும் விதிகளை வெளியிட்டுள்ளது.
பணியில் இருக்கும் ஊழியர்கள் அவசர மருத்துவத் தேவைகள், திருமணம், கல்வி மற்றும் வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக ஆண்டுக்கு இருமுறை வரை தங்களது கணக்கிலிருந்து அதிகபட்சமாக 75% வரை முன்பணமாக எடுத்துக்கொள்ளலாம். முன்பணம் எடுத்தாலும், எதிர்கால ஓய்வுக் காலப் பாதுகாப்பிற்காக ஊழியரின் கணக்கில் குறைந்தபட்சம் 25% தொகை இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வேலையை விட்டு விலகிய உறுப்பினர்கள் தங்களது முழு பிஎஃப் தொகையையும் (100%) திரும்பப் பெற 12 மாதங்கள் (1 ஆண்டு) காத்திருக்க வேண்டும். (வேலை இழந்த 1 மாதத்திற்குள் 75% தொகையை எடுக்கும் வசதி நடைமுறையில் உள்ளது).
ஊழியர்கள் அடிக்கடி வேலை மாறும்போது ஓய்வூதியத் தொகையை உடனடியாக எடுப்பதைத் தடுத்து, நீண்டகால ஓய்வூதியப் பலன்களை உறுதிசெய்யும் நோக்கில், EPS ஓய்வூதியத் தொகையைப் பெற 36 மாதங்கள் (3 ஆண்டுகள்) காத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தாதாரர்கள் தங்களது UAN கணக்கில் ஆதார் மற்றும் வங்கி விவரங்களை இணைத்து, ஆன்லைன் போர்ட்டல் அல்லது மொபைல் செயலி மூலமாகவே பணத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.