அதிர்ச்சி: வாந்தியைத் தூண்ட முயன்றபோது இளம்பெண்ணின் வயிற்றுக்குள் சென்ற முட்கரண்டி!

 

 

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், வாந்தியைத் தூண்ட முயன்றபோது முழு அளவிலான முட்கரண்டி எதிர்பாராதவிதமாகக் கைநழுவி அவரது வயிற்றுக்குள் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் முட்கரண்டியை வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், நவீன கீஹோல் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுக்குள் இருந்த முட்கரண்டியை மருத்துவர்கள் பாதுகாப்பாக அகற்றினர்.

சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் 2 நாட்களில் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தொண்டைக்குள் கூர்மையான பொருட்களைச் செலுத்தி வாந்தியைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.