நிஜமா? மீசையுடன் பிறந்த குழந்தை... வைரலாகும் வீடியோ!
பிறந்த சில நேரங்களிலேயே குழந்தையின் முகத்தில் மீசை போன்ற அடர்ந்த கருப்பு முடி இருப்பதைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குழந்தையின் மேல் உதடு மற்றும் கன்னப் பகுதியில் முடி காணப்படுவது இணையவாசிகளிடையே வியப்பையும் நகைச்சுவையான கருத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறந்த உடனேயே வேலைக்குத் தயாராகிவிட்டது என்றும், வயதானவரைப் போலத் தோற்றமளிக்கிறது என்றும் சிலர் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் உடலில் Lanugo எனப்படும் மெல்லிய முடிகள் காணப்படுவது இயல்பானது. இருப்பினும், இந்தக் காணொளியில் தெரியும் முடியின் அடர்த்தி மற்றும் தோற்றம் காரணமாக, அது உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அல்லது எடிட்டிங் மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் அல்லது சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.