undefined

உஷார்!! சென்னையில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்!!

 

தமிழகத்தில் கொரோனா அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் அசுர வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகளை இந்தியாவில் பல மாநிலங்களில் விதித்துள்ளன.

அந்த வகையில் தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் 1ம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

அத்தியாவசிய போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது . மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.