10-வது பட்ஜெட்டை தாக்கல் செய்து மொரார்ஜி தேசாய் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்!

 

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2027-2028-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கான முன்கூட்டிய ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வீட்டுவசதி, நகரமயமாக்கல் மற்றும் கலாசாரத் துறை நிபுணர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட்டாக அமைகிறது. ஏற்கனவே 8 முழுமையான பட்ஜெட்டுகளையும், 2024-ம் ஆண்டு ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்து தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இந்த 10-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதன் மூலம், முன்னாள் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் படைத்த 10 பட்ஜெட்டுகள் என்ற சாதனையையும் நிர்மலா சீதாராமன் சமன் செய்ய உள்ளார்.