தங்கம் விலையில் மாற்றம் இல்லை.. சென்னையில் சவரன் ரூ.93,760-க்கு விற்பனை!

 

சென்னையில் இன்று (நவம்பர் 29) ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், வரும் மாதங்களிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,720-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.93,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 28) நிலவிய அதே விலையே இன்றும் நீடிக்கிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,786-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வரும் சூழலில், இடையிடையே சிறிய அளவில் உயர்வு ஏற்பட்டாலும் அது நீடிப்பதில்லை. அடுத்த மாதமும் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும், இந்த விலை வீழ்ச்சி இன்னும் சில மாதங்கள் தொடரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.