undefined

  பரபரக்கும் சட்டப்பேரவை.... சபாநாயகர்  அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?! 

 


 
தமிழகத்தில் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்கான கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக சபாநாயகர் அப்பாவு மீது எதிர்க்கட்சியான அதிமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.


தமிழக சட்டபேரவையை சபாநாயகர் அப்பாவு முறையாக நடத்துவதில்லை. எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் பேச போதிய நேரம் அனுமதி அளிப்பதில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார் என்பது உட்பட  பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அதிமுக சார்பில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் உள்ளிட்ட 16 அதிமுக எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 234 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், 118 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே சபாநாயகர் அப்பாவு பதவியில் இருந்து நீக்கப்படுவார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.  ஆளும் கட்சியான திமுகவிற்கு 133 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறாது எனவே தெரிகிறது.  


தற்போது சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெற உள்ளதால், அவர் அவையில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் துணை சபாநாயகர் பிச்சாண்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்தி வருகிறார். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது செங்கோட்டையன் ஆதரவாக செயல்பட்டு வருவதால் அதிமுக உடன் அவர் இன்னும் இணக்கமான சூழலிலேயே இருந்து வருகிறார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.