#BIG BREAKING: 2026-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு: 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பு!

 

2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் நோபல் பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்ல் டெய்சோர்த், பீட்டர் ஹெகிமான்  மற்றும் ஜார்ஜ் நகேல் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் இம்முறை நோபல் பரிசுகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒளியினால் கட்டுப்படுத்தப்படும் அயனி சேனல்கள் மற்றும் 'ஆப்டோஜெனடிக்ஸ்'  துறை தொடர்பான அதிநவீன கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

நரம்பியல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இவர்களது ஆராய்ச்சி, மூளைக் கோளாறுகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் புதிய மற்றும் பயனுள்ள சிகிச்சைகளைக் கண்டறியவும் பெரிதும் வழிவகுத்துள்ளது.