கீழ் அடுக்குகளில் வடகிழக்கு பருவக்காற்று... இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வடகிழக்கு பருவக்காற்று வீசி வருவதால், இன்று (நவம்பர் 29) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் என மொத்தம் 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.