நார்வே இளவரசி அஸ்ட்ரிட் காலமானார்.. உலக தலைவர்கள் இரங்கல்!
Sep 12, 2026, 15:29 IST
நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹாரால்டின் மூத்த சகோதரியும், அந்நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினருமான இளவரசி அஸ்ட்ரிட் காலமானார். அவருக்கு வயது 94.
தனது தம்பியான மன்னர் ஹாரால்டின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இளவரசி, அடுத்த இரண்டு நாட்களிலேயே காலமானதாக நோர்வே அரச குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நோர்வேயின் முன்னாள் மன்னர் ஐந்தாம் ஒலாவின் மகளான இவர், கடந்த 1954 முதல் 1968 வரை நோர்வே நாட்டின் 'முதன்மைப் பெண்ணாக' அரசப் பணிகளைத் திறம்பட கையாண்டவர். கடந்த செப்டம்பர் 9ம் தேதியன்று நடைபெற்ற தனது தம்பியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதே இவரது கடைசிப் பொது நிகழ்வாகும். நோர்வே அரச குடும்பத்திற்கு அடுத்தடுத்து நேர்ந்துள்ள இந்த இறப்புகள் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.