இந்தியாவில் கூட கிடையாது... முஸ்லிம் நாட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்ட கரன்சி நோட்டு.. எந்த நாடு தெரியுமா?
இந்தியாவில் கூட கிடையாது. ஆனால் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா இருந்து வந்தாலும், அங்குள்ள கலாச்சாரத்தில் பண்டைய இந்து மதத் தாக்கமும் புராண அடையாளங்களும் தொடர்ந்து மதிக்கப்பட்டு வருகின்றன.
கல்வி மற்றும் அறிவின் அடையாளமாக விநாயகர் கருதப்படுவதால், கடந்த 1998-ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசு வெளியிட்ட 20,000 ரூபியா மதிப்புள்ள கரன்சி நோட்டில் விநாயகரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. அந்நோட்டில் நாட்டின் முதல் கல்வி அமைச்சரும், புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரருமான கி ஹஜார் தேவார்தாரா உருவத்துடன் சேர்த்து விநாயகரின் படமும் இடம்பெற்றிருந்தது.
பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் புழக்கத்தில் இருந்த அந்த பழைய நோட்டுகள் கடந்த 2008-ஆம் ஆண்டின் இறுதியில் அரசு மூலம் திரும்பப் பெறப்பட்டு, அதன்பிறகு வெளியிடப்பட்ட புதிய கரன்சி நோட்டுகளில் விநாயகர் படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.