அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி நோட்டீஸ்!
கல்வி நிறுவன அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாகச் சட்டமன்றத்தில் பேசிய நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது சட்டமன்ற உறுப்பினர் (MLA) சான்றிதழைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தேர்தல் ஆணையத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் வழக்கறிஞர் மூலமாக முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தின.
அமைச்சர் மீது உரிய ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.