23 வயசு தான்... பிரபல ஜப்பான் நடிகை நோவா நகாடா காலமானார்!

 

 

 

ஜப்பானிய திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்த நோவா நகாடா (23) காலமானார். 'அல்ட்ராமேன் தியோ' (Ultraman Taiga) தொடரின் மூலம் உலக அளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர் இவர். கடந்த 2019ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், 'மை டாடி' (My Daddy) உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

allowfullscreen

இவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்ப, இவரது இறுதிச்சடங்குகள் முற்றிலும் ரகசியமான முறையில் நடத்தப்பட்டதாக இவரின் மேலாண்மை ஏஜென்சி சமீபத்தில் அறிவித்துள்ளது.

இதனிடையே, இவர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நடித்து முடித்துள்ள 'இஃப் யூ சீ ஹெர், சே ஹலோ' (If You See Her, Say Hello) திரைப்படம், குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இளம் நடிகையின் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.