6 நாட்களில் சவரனுக்கு ரூ.5,720 குறைந்த தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (நவம்பர் 16) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.1,00,920-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,00,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று ரூ.12,615 ஆக இருந்தது. இன்று ரூ.75 குறைந்து ரூ.12,540-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,720 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் விலை நிலவரத்தை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.இதற்கிடையே, வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 சரிந்து ரூ.1,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.