நவம்பர் 27ம் தேதி 13 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்: திரையரங்குகளுக்காகக் கடும் போட்டி!

 

 தமிழ் திரையுலகில் வரும் நவம்பர் 27-ஆம் தேதி ஒரே நாளில் 13 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. டெலிவரி பாய், நிறம், மௌன மொழிகள், நெல்லை பாய்ஸ், சிக்னல் அட் 11:30 உள்ளிட்ட படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே தனுஷ் மற்றும் விஜய் ஆண்டனி நடித்த படங்கள் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால், புதிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

திரையரங்குப் பற்றாக்குறை மற்றும் போட்டி காரணமாக, வெளியாக உள்ள படங்களில் சில தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் படங்கள் வெளியாகும் நிலையில், நடப்பு ஆண்டில் வெளியான நேரடித் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 200-ஐக் கடக்க உள்ளது