இனி தியேட்டர்களில் 6 காட்சிகள்... தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியீடு!

 

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தமிழ் திரையுலகின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்களை நாளொன்றுக்கு 6 காட்சிகள் வரை திரையிடத் தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மூன்று பெரிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.  நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படத்திற்குத் தமிழகத்தில் சுமார் 50% திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2  படத்திற்கு 30% திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா  திரைப்படத்திற்கு 20% திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து முதல் 7 நாட்களுக்குத் தினசரி 6 காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்காட்சி காலை 6 மணிக்குத் தொடங்கி, கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 2:30 மணிக்குள் முடிவடையும் வகையில் காட்சிகள் திட்டமிடப்படும்.

உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இனி நாளொன்றுக்கு 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதித்துள்ளது.

தமிழ்ப் ஃபிலிம் ஆக்டிவ் புரொட்யூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்றுத் 'தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில்' திருத்தம் செய்து முதலமைச்சர் விஜய் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.