இனி ஏ.சி. பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணம் - ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அசத்தல் அறிவிப்பு!
Oct 6, 2026, 07:25 IST
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், அம்மாநில அரசு இதிலும் ஒருபடி மேலே சென்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆந்திராவில் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், இனி அம்மாநிலத்தில் குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகளிலும் பெண்கள் எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
எளிய மற்றும் நடுத்தரப் பெண் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் ஏ.சி. பேருந்துகளையும் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரும் ஆந்திர அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.