நொய்யல்: முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு!

 

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.

கரூர் மாவட்டம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுத் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புன்னம் சத்திரம் அருகிலுள்ள பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவில் மற்றும் இப்பகுதியில் உள்ள பிற முருகன் கோவில்களிலும் கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்குப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.