undefined

நிர்வாண வீடியோ... கல்லூரி மாணவியுடன் அடிக்கடி உல்லாசம்... அதிர்ச்சி அளித்த காதலன்!

 

கல்லூரி மாணவியுடன் திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், திருமணத்துக்கு மறுத்த வாலிபர் நிர்வாண வீடியோவைக் காட்டி அடிக்கடி மாணவியை மிரட்டி வந்துள்ளார்.

திண்டுக்கல், மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அந்த மாணவி பெற்றோரை இழந்த நிலையில், பாட்டி வீட்டில் வசித்து வந்தார். ஜோஸ், அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி வைகை அணைக்கு மாணவியை வரவழைத்த ஜோஸ், அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்த பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து, அந்த வீடியோவை காட்டியே மாணவியை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

தன்னைத்  திருமணம் கொள்ளுமாறு செய்து மாணவி கேட்ட போது, தட்டிக் கழித்து வந்துள்ளார். தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என்று சந்தேகமடைந்த கல்லூரி மாணவி, ஜோஸ் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோர்களிடம் நியாயம் கேட்டார். அப்போது அவர்களும் மாணவியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் கூறி உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என்று கூறியுள்ளனர். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து திருமணத்துக்கு மறுத்த ஜோஸ் மரியராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?