விளையாட்டு விளம்பரத்தில் நிர்வாணம்.. லட்சக்கணக்கில் ஃபாலோயர்களை இழந்தார் நடிகை சிட்னி ஸ்வீனி!
Sep 16, 2026, 10:42 IST
சர்ச்சைக்குரிய விளையாட்டுப் பந்தயச் செயலி ஒன்றின் விளம்பரத்தில் பகுதியளவு ஆடையின்றித் தோன்றிய நிர்வாணமாகத் தோன்றிய பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, குறுகிய காலத்திற்குள் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை இழந்துள்ளார்.
'நோவிக்' என்ற விளையாட்டுப் பந்தயச் செயலியின் விளம்பரத்தில் நடிகை சிட்னி ஸ்வீனி பகுதியளவு ஆடையின்றித் தோன்றினார். இவர் அந்த நிறுவனத்தின் பங்குதாரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டில் பெண்களைப் பாலியல்மயப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பாளர்கள் இந்த விளம்பரத்திற்குத் தீவிர கண்டனம் தெரிவித்தனர். இந்த விளம்பரம் வெளியாகி வெறும் 2 நாட்களுக்குள்ளாகவே, இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்ந்து வந்த 2,00,000-க்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்வதை நிறுத்தினர்.