திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராகிறார் ஓ.பன்னீர்செல்வம்!

 

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதல்களுக்குப் பிறகு திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, மிக முக்கியப் பொறுப்பாகத் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவிலிருந்து விலகித் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்குக்க் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தென் மாவட்டங்களில் திமுகவின் பலத்தை மேலும் அதிகரிப்பதோடு, முக்குலத்தோர் சமுதாய வாக்குகளைத் திமுகவின் பக்கம் முழுமையாக ஈர்க்கும் நோக்கில் கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பான முறையான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாநில அரசியல் களத்தில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.