ஆபாச மெசேஜ் வழக்கு... தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு! 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட மூத்த பெண் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக  சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்திய திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான போலீசார், நேற்று மாலை அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை டிசம்பர் 11, 2026 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அருள் விக்னேஷின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுச் சைபர் குற்றப்பிரிவு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

117 நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.