அக். முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி - மாணவர்களுடன் கலந்துரையாடல், பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு!

 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அகில இந்தியத் தலைவர் ராகுல்காந்தி அக்டோபர் முதல் வாரத்தில் சென்னைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

சென்னைக்கு வருகை தரும் ராகுல்காந்தி, 'மாணவர்களின் குரல்'  என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுகிறார்.

கல்வி அமைப்பில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுத்தேர்வுச் சிக்கல்கள், நீட் நுழைவுத்தேர்வுப் பிரச்சனைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் மாணவர்களுடனும், கட்சி நிர்வாகிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்க உள்ளார்.

வட மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளையும், மாணவர் நலன்களையும் கையில் எடுத்துவரும் ராகுல்காந்தி, தமிழக இளைஞர்களைப் பெருமளவில் காங்கிரஸில் இணைப்பதற்கான வியூகங்கள் குறித்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.