மாதத்தின் முதல் நாள் தங்கம் வாங்க உகந்த நேரம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 

 

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, நேற்று மட்டும் சற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது.அதன்படி, சென்னையில் இன்று அக்டோபர் 1-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,710-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனையான நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.

இதற்கிடையே 18 காரட் தங்கம் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.11,240-க்கும், ஒரு சவரன் ரூ.1,920 குறைந்து ரூ.89,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

 கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உள்ளது.தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய விலையை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கலாம்.