அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நேபாளப் பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 800யைக் கடந்தது - தொடரும் மீட்புப் பணிகள்!

 

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐத் தாண்டிவிட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த 8,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பல்வேறு பகுதிகளில் தொடரும் தேடுதல் வேட்டையில் பலி எண்ணிக்கை 800-ஐக் கடந்துள்ளது.

இந்த பேரிடரில் சிக்கிக் காணாமல் போன 320 வெளிநாட்டினர் உட்பட சுமார் 3,000 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த சுமார் 20,000 பணியாளர்கள் களத்தில் இறங்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.