வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள்... ஹார்முஸ் நீரிணையில் அடுத்தடுத்து பதற்றம்!

 

ஹார்முஸ் நீரிணை வழியாக உரிய அனுமதியின்றிச் செல்ல முயன்ற நான்கு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மற்றும் ஆளில்லா கப்பல் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாக அந்நாடு கூறியுள்ளது.

View this post on Instagram

A post shared by India Today Global (@indiatodayglobal)

இந்தச் சம்பவங்கள் குறித்த ஈரானின் அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் முக்கியமான கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தத் தகவல்கள் பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.

எண்ணெய் கப்பல்கள் தொடர்பான சம்பவங்கள் மற்றும் அமெரிக்காவின் ஆளில்லா வாகனங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து தனித்த உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளதா என்பது கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப் பதற்றம் நீடித்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்திலும் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.