சாதனை... ”ஒலிம்பியாட் மாஸ்டர்ஸ்” போட்டியில் வெற்றி பெற்று நாசா செல்லும் 10 வயது சிறுமி!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது மாணவி ஆயிஷா தேசிய அளவில் நடைபெற்ற கணிதப் போட்டியில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். அவர் மிட்சியூர் ஒலிம்பியாட் மாஸ்டர்ஸ் கணிதப் போட்டியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதிலும் இருந்து நாசா கல்வி சுற்றுலாவிற்காகத் தேர்வான வெறும் நான்கு மாணவர்களில் ஒருவராக அவர் தகுதி பெற்றுள்ளார்.
விண்வெளி மையத்தை நேரில் பார்வையிட முழு நிதியுதவியுடன் அமெரிக்கா செல்லவிருக்கும் இச்சிறுமியின் சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடினமான கணிதப் போட்டிகளை எளிதில் எதிர்கொண்டு அவர் பெற்ற இந்த வெற்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது. ஏழை எளிய பின்னணியில் இருந்து வந்து இந்த உயரத்தைத் தொட்டிருப்பது பல மாணவிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற விண்வெளி மையத்திற்குச் சென்று விஞ்ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த நல்வாய்ப்பைப் பெற்றுள்ள ஆயிஷாவிற்குப் பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி அவர் அடியெடுத்து வைத்துள்ளார்