முதலிரவில் புதுமாப்பிள்ளை வீட்டை விட்டு ஓட்டம்... காரணத்தைக் கேட்டு சிரித்த உறவினர்கள்... 5 நாட்களுக்குப் பின் திரும்பி வந்தார்!
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குச் சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர், தனக்கு ஏற்பட்ட கடும் பதற்றம் காரணமாக 'பல்பு வாங்கி வருவதாகக்' கூறி வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட்டார். இதனால் அவரது இரண்டு சகோதரிகளின் திருமணமும் அவர் இல்லாமலேயே நடைபெற்ற நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
முசாபர்நகரைச் சேர்ந்த மொஹ்சீன் என்பவருக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது திருமணம் முடிந்த மறுநாளே, மொஹ்சீனின் இரண்டு சகோதரிகளின் திருமணத்தையும் ஒரே மேடையில் நடத்த அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். மொஹ்சீனின் திருமணம் முடிந்து முதலிரவுக்காக அவரையும், அவரது மனைவியையும் குடும்பத்தினர் அறைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் இருந்த விளக்குகள் மிகவும் வெளிச்சமாக இருந்ததால், வெளிச்சம் குறைவான பல்பு வேண்டும் என்று மனைவி கேட்டுள்ளார். அப்போது மொஹ்சீன், வீட்டில் பல்பு இல்லை என்றும், அருகில் உள்ள கடைக்குச் சென்று வாங்கி வருவதாகவும் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குடும்பத்தினர் அடுத்த நாள் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்ததால், மொஹ்சீனை யாரும் கவனிக்கவில்லை. ஆனால், வெகுநேரமாகியும் அவர் திரும்பி வராததால், குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர். மறுநாள் காலை வரை அவர் வராததால், வேறு வழியில்லாமல் அவரது இரண்டு சகோதரிகளின் திருமணங்களும் மொஹ்சீன் இல்லாமலேயே நடத்தி முடிக்கப்பட்டன. பின்னர் மொஹ்சீன் காணாமல் போனது குறித்துப் போலீசாரிடம் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி வந்த சூழலில், வீட்டை விட்டுச் சென்று 5 நாட்களுக்குப் பிறகு, ஹரித்வார் பகுதியில் இருந்தபடி மொஹ்சீன் தனது உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தகவலறிந்து போலீசார் உடனடியாக ஹரித்வார் சென்று அவரைக் கண்டுபிடித்து மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமண நாளன்று தனக்கு முதலிரவு குறித்துப் பதற்றம் ஏற்பட்டதாகவும், மனைவியின் அருகில் சென்றபோது பதற்றம் மேலும் அதிகரித்ததாகவும் மொஹ்சீன் கூறியுள்ளார். இந்த மன அழுத்தத்தால்தான் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை விட்டு ஓடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!