undefined

நாளை பிரதமரின் பிறந்தநாளில் 500 குழந்தைகள் காப்பகங்கள் ... முதல்வர் அதிரடி !  

 


பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் நாளை செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்காக 500 காப்பகங்கள் தில்லி அரசு தொடங்கும் என முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.  தில்லி தலைமைச் செயலகத்தில் விஸ்வகர்மா பூசை செய்த பிறகு, இந்தியாவின்  வளர்ச்சிக்குப் பங்களித்தற்காகத் தொழிலாளர்களை முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  

தொழிலாளர்களின் கடின உழைப்பு இல்லாமல் எந்த மாநிலத்தின் வளர்ச்சியும் சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார். தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, ஏழைகளுக்குப் பயனளிக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம், ஆரோக்கிய மந்திர் மருத்துவமனைகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு தொடங்கியுள்ளது.  

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு "பால்னா" என்ற பெயரில் 500 குழந்தைகள் காப்பகங்களை தொடங்க உள்ளோம். பெண் தொழிலாளர்கள் பணியில் இருக்கும்போது அவர்களின் குழந்தைகள் அங்குக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள். செப்டம்பர் 17ம் தேதி பிரதமர்  மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு  ஒடிசாவில் 75 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.