ஓணம் பண்டிகை.. கேரளாவில்ரூ.771 கோடிக்கு மது விற்பனை சாதனை!

 

கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, கடந்த 8 நாட்களில் மட்டும் அரசு மதுபானக் கடைகளில் வரலாறு காணாத அளவில் ரூ.771.29 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே ஓணம் பண்டிகைக் காலத்தில் ரூ.694.66 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு கூடுதலாக சுமார் ரூ.77 கோடி அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாளான உத்திராடத் திருநாளில் மட்டும் பெவ்கோ மற்றும் கன்சம்ஃபெட் கடைகள் மூலம் மொத்தம் ரூ.146.66 கோடிக்கும் அதிகமான மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டிகைக் கொண்டாட்டங்களின் உச்சகட்டமாக இத்தகைய பெருமளவு விற்பனை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.