பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்!

 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு (வண்டி எண்.06579) சிறப்பு ரயில் வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கிற்கு சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.22 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு (06580) சிறப்பு ரெயில் வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு வருகிற 29-ந்தேதி இரவு 9.38 மணிக்கு வந்து 9.40 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை, ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதன் மூலம் பண்டிகை காலத்தில் பயணம் செய்யும் பொதுமக்களுக்குப் பெரும் வசதியாக அமையும். மேலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் இது போன்ற கூடுதல் சேவைகள் வழங்குவது பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.