ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்!
Sep 3, 2026, 12:07 IST
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் மருந்து கலவை செய்யும் பணியின்போது ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மருந்து கலவை செய்யும் அறையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொருவர் தீவிர சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டாசு ஆலைக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று தீவிரமான மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.