இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!
Aug 24, 2026, 10:40 IST
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால், பெரிய வெங்காயத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. தினசரி வழக்கமாக வரும் லாரிகளின் வரத்து குறைந்ததன் காரணமாக இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இதற்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட விலையை விட உயர்ந்து, தற்போது ஒரு கிலோ வெங்காயம் ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.
காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சந்தைக்கு வரும் லாரிகளின் வரத்து சீரானால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.