மகரவிளக்கு சீசனை முன்னிட்டு இன்று சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறவுள்ள மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சபரிமலை கோவில் நடை வரும் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும்.
இந்த சீசனில் பக்தர்கள் பெருமளவில் வருகை தரும் நிலையில், தரிசனத்தை ஒழுங்காக நடத்த ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 70,000 பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு வாயிலாக அனுமதி வழங்கப்படும். மேலும் 20,000 பக்தர்களுக்கு உடனடி தரிசன முன்பதிவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 90,000 பக்தர்கள் தினசரி தரிசன அனுமதி பெறுவர். முன்பதிவு *sabarimalaonline.org* இணையதளம் வழியாக செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதேபோல் உடனடி முன்பதிவு மையங்கள் பம்பா, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் தரிசன தேதியை முன்கூட்டியே பதிவு செய்து பயணம் செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?