“ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு புதிய விதிகள்! 2027 முதல் என்னென்ன மாற்றம்?”
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் கோடிக்கணக்கான நுகர்வோருக்கு முக்கிய மாற்றங்கள் வர உள்ளன. மத்திய அரசு, நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள், 2020-ல் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. புதிய Consumer Protection (E-Commerce) (Amendment) Rules, 2026, 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் தளங்களில் ஒரு பொருளுக்கு தள்ளுபடி அறிவிக்கும்போது, தற்போதைய குறைக்கப்பட்ட விலையுடன் அதன் ‘Prior Price’-ஐயும் குறிப்பிட வேண்டும்.
Online shopping gets more!
— Consumer Affairs (@jagograhakjago) September 11, 2026
From 1 January 2027, the new E-Commerce Rules, 2026 will strengthen consumer protection through greater transparency in pricing and sponsored listings, safeguards against misleading search results and dark patterns, and stronger grievance redressal.
A… pic.twitter.com/CKpnudJMOa
அதாவது, தள்ளுபடி அறிவிப்பதற்கு முந்தைய 30 நாட்களில் அந்தப் பொருள் விற்பனை செய்யப்பட்ட குறைந்தபட்ச விலை ‘Prior Price’ என கணக்கிடப்படும். இதன் மூலம் போலியான அல்லது குழப்பம் ஏற்படுத்தும் தள்ளுபடி விளம்பரங்களை கட்டுப்படுத்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.நீங்கள் ஆன்லைனில் ஒரு பொருளைத் தேடும்போது, தேடலுடன் தொடர்பில்லாத வகையில் முடிவுகளை மாற்றி அமைப்பது அல்லது நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் search results-ஐ கையாளுவது தடை செய்யப்பட்டுள்ளது.மேலும், Sponsored Products அல்லது விளம்பரமாக முன்னிலைப்படுத்தப்படும் பொருட்கள் தெளிவாக ‘Sponsored’ என அடையாளப்படுத்தப்பட வேண்டும்.