அச்சச்சோ... நாளை முதல் 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டுகள் முடக்கம்!
Sep 30, 2026, 08:58 IST
தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத குடும்ப அட்டைப் பதிவுகளை நாளை (அக்டோபர் 1) முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இறந்தவர்களின் பெயர்களை அட்டையிலிருந்து நீக்காமல் இருப்பது, வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவுகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பது போன்ற குளறுபடிகளைச் சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வரும் நிலையில், கடந்த 6 மாதங்களாக எந்தவிதப் பொருட்களையும் வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகள் இதன் மூலம் முடக்கப்பட உள்ளன.