undefined

  நள்ளிரவில் பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த ஆபரேஷன் சிந்தூர்!  

 


இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது திடீர் தாக்குதலை தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று மே 7ம் தேதி நள்ளிரவு 1:05 மணிக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.  உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டன.
இதில், பாகிஸ்தான் இராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பில்  கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங்  இது குறித்து கூறியுள்ளனர்.  
பஹல்காம் தாக்குதலில் 26 பெண்களின் கண்முன்னே அவர்களின் கணவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கணவர்களை இழந்த பெண்கள் இந்தியாவில் சிந்தூர் (பொட்டு) வைப்பதை தவிர்க்கும் வழக்கம் உள்ளது. திருமணம் ஆன பெண்கள் நெற்றி வகிட்டில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும்.


இந்நிலையில், 26 பெண்கள் பொட்டு வைப்பதை தவிர்க்கும் நிலையை தீவிரவாதிகள் ஏற்படுத்தியதால் பழி தீர்க்கும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரைப் பரிந்துரைத்த பிரதமர் மோடி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.