தவெக வேட்பாளருக்கு தொடரும் எதிர்ப்பு... பிரச்சாரத்தின் பாதியிலேயே அவசரமாக வெளியேற்றம்!

 

தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளரான சத்தியபாமா பிரச்சாரத்திற்குச் சென்றபோது, அப்பகுதியில் திரண்ட அதிமுகவினர் அவருக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அவர் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டுத் திரும்பினார்.

சத்தியபாமா தனது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெக கட்சியில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடுவதால், மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் அவர் மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

தாராபுரத்தில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட முயன்றபோது, அங்கு திரண்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு எதிராக "துரோகி, துரோகி" என முழக்கங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மக்கள் மத்தியில் நிலவிய தொடர் எதிர்ப்பு மற்றும் கடுமையான கோஷங்கள் காரணமாக, பிரச்சாரத்தைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால் சத்தியபாமா அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.