undefined

இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்! 

 

வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா அருகே உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை மேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (அக். 11) நீலகிரி, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் நிர்வாகங்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்கு மழை நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?