சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மொத்த விற்பனை சந்தையில் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வரத்து குறைந்ததுடன், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநில வியாபாரிகளின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் சந்தைக்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இங்கு மாலை நேரத்தில் முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு ஏலம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 11) நடைபெற்ற ஏலத்தில் முருங்கைக்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ முருங்கைக்காய் மொத்த விலை:

  • நாசிக் முருங்கைக்காய் – ரூ.191

  • மரம் முருங்கை – ரூ.173

  • கரும்பு முருங்கை – ரூ.70

  • செடி முருங்கை – ரூ.58

விலை உயர்வால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், சில்லறை விற்பனையில் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.