தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 3 பேர் கைது - பிடிபட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
Oct 27, 2026, 08:00 IST
தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து நேற்றிரவு வலிப்பு வந்தது போல் நடித்துக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில், மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.
நேற்றிரவு சிறையின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன் என்பவரைப் போலீசார் முதன்முதலில் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், இன்று காலை மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர் மற்றும் ராஜ்குமார் உள்பட மேலும் 3 கைதிகள் போலீஸாரிடம் சிக்கினர்.
இதன் மூலம் இதுவரை பிடிபட்ட தப்பியோடிய கைதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தலைமறைவாக உள்ள மீதமுள்ள 13 கைதிகளையும் விரைந்து பிடிக்க 17 தனிப்படை போலீஸார் மாவட்ட எல்லைகள் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.