பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட  150-க்கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில்  அனுமதி!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது கலனாகோர் பெடாரி கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாலையோர வியாபாரியிடம் பானிபூரி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்ததால் குழந்தைகள் உட்பட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

allowfullscreen

இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 குழந்தைகள் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (PICU) சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

அசுத்தமான தண்ணீர் அல்லது கெட்டுப்போன உணவுப் பொருட்கள் காரணமாக உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே பாதிப்புக்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும். சுகாதாரத் துறையினர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்