பீகார் தேர்தலில் 25 வேட்பாளர்களை அறிவித்தார் ஓவைசி!
வரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆல் இந்தியா மஜ்லீஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில், மொத்தம் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தில் 100 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோம் என ஏற்கனவே AIMIM அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், வெளியிடப்பட்ட முதல்கட்ட பட்டியலில், 2 தொகுதிகள் முஸ்லிம் அல்லாத வாக்காளர் ஆதிக்கம் கொண்ட பகுதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய தேர்தலில் AIMIM 19 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றியாளர்களில் 4 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் சேர்ந்தது அரசியல் வட்டாரங்களில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறையில், முதல்கட்ட வேட்பாளர் அறிவிப்பு மூலம் AIMIM கட்சி தனது தேர்தல் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!