பாகிஸ்தானில் கியாஸ் டேங்கர் மீது பஸ் மோதி தீ விபத்து: பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் பலி... பகீர் வீடியோ!

 

 

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கியாஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

Another Video Ten people, including three children, have been killed and 27 injured after a passenger coach collided with a liquefied petroleum gas (LPG) tanker on Pakistan’s south-western coast, setting both vehicles ablaze. Three children among 10 killed in fireball on Makran coastal highway after coach hits gas tanker #Pakistan #Gwadar #Accident #Balochistan https://t.co/6Qb2ePiort… https://t.co/Ha9kxICmwp

— Siraj Noorani (@sirajnoorani) November 19, 2026

பலூசிஸ்தான் மாகாணத்தின் டுர்பெட் நகரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. குவாடர் மாவட்டம் பசால் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த கியாஸ் டேங்கர் லாரி மீது மோதியது.

மோதிய வேகத்தில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.