undefined

இந்திய மகளிர் அணியின் வெற்றியைக் கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்... வைரலாகும் வீடியோ!

 

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியதை நாடு முழுவதும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் ரசிகர் இந்திய தேசிய கீதத்தை பாடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை முதன்முறையாக வென்று தன்னம்பிக்கையும் திறமையும் நிரூபித்தது.

அதே நேரத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் என்ற கிரிக்கெட் ரசிகர் தனது குடும்பத்துடன் போட்டியை தரிசித்து இந்திய அணியின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்திருந்த அவர், போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய தேசிய கீதத்தை எழுந்து பாடிய காட்சி இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பாராட்டுகளை பெற்று வருகிறது.

இருநாட்டு ரசிகர்களுக்கு இடையே பெரும்பாலும் போட்டி கவனம் ஈர்க்கும் நிலையில், விளையாட்டு எல்லைகளைக் கடந்து மனிதாபிமானத்தை இணைக்கும் பாலமாக அமைகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?