சீன விண்வெளி நிலையத்தில் முதல் வெளிநாட்டு வீரர்... வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்!

 

 

சீனா தனது ஷென்சோ-24 விண்கலத்தை 3 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலியும் இடம்பெற்று, சீனாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பங்கேற்கும் முதல் வெளிநாட்டவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலத்தில், டாங் ஹாங்போ மற்றும் வு யி ஆகியோருடன் முகமது ஜீஷான் அலியும் பயணிக்கிறார்.

சுமார் 3 மணி நேரத்தில் சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தைச் சென்றடையும் இந்தக் குழுவில், ஜீஷான் அலி ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் ஷென்சோ-23 விண்கலம் மூலம் பூமி திரும்புவார்.தற்போது சொந்தமாக விண்வெளி நிலையத்தை இயக்கும் ஒரே நாடாக விளங்கும் சீனாவின் தியான்காங் நிலையம், 2022 முதல் செயல்பட்டு வருகிறது.