சென்னையில் மீண்டும் பயங்கரம்...  மயானத்தில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் படுகொலை!

 

 

சென்னை பல்லாவரம் அருகே மயானத்தில் பணிபுரிந்து வந்த 25 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மயானப் பணியாளர் படுகொலை

சென்னை அடுத்த அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25). இவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னையில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.