undefined

 புத்த விழாவில் பாராகிளைடர் தாக்குதல்...  40 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

 
 


 

மியான்மரில் தாடிங்யுட் எனப்படும் புத்த மத பண்டிகையை முன்னிட்டு சுமார் 100 மக்கள் மெழுகுவர்த்திகள் ஏந்தி, அமைதியான ஊர்வலமாக திரண்டிருந்த நேரத்தில், மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர் மூலம் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. இதில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 47 பேர் காயமடைந்துள்ளனர்.


 
மக்கள் நிம்மதியாக பங்கேற்ற நிகழ்வு, இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் கலந்து நடைபெற்றது. தாக்குதலை மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படை  சார்ந்த ஒருகுழு நடத்தியதாக தெரியவந்துள்ளது. வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என முன்னதாக எச்சரிக்கையும் வந்திருந்தது. 

7 நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். "முதல் குண்டு வெடிக்கும்போது என் முழங்கால் காயமடைந்தது. என் அருகே பலர் இறந்தார்கள்" என ஒருவர் கூறியுள்ளார். "குழந்தைகள் உட்பட பலர் துண்டு துண்டாக சிதறி கிடந்தனர்" என விழாவில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறினார்.மக்கள் இன்னும் உடல் பாகங்களை சேகரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?