undefined

பெற்றோர்களே உஷார்... தமிழகத்தில் சளிக்கான மருந்து குடித்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சளி பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை, மருந்து அளிக்கப்பட்ட சில நிமிடங்களில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு ‘தடை செய்யப்பட்ட மருந்து கொடுக்கப்பட்டது காரணமா?’ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெற்றோரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக சளி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சளி குறைக்கும் நோக்கில் சொட்டு மருந்து அளித்து, அதை வீட்டில் கொடுக்கும்படி அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் பெற்றோர் மருந்து சொட்டிய சில நேரத்தில், குழந்தைக்கு திடீரென உடல் நடுக்கம் ஏற்பட்டு, துடிதுடித்து மயங்கி விழுந்தது. பெற்றோர் பதற்றத்தில் குழந்தையை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து தகவல் சேகரித்தனர். மருந்து இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வகைதானா? மருந்தின் அளவில் பிழை ஏற்பட்டதா? அல்லது குழந்தைக்கு மருந்து அலர்ஜி விளைந்ததா? என்ற மூன்று கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மருந்தின் வகை மற்றும் அதன் தாக்கம் குறித்து மருத்துவ அறிக்கையை போலீசார் காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?